கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.
சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி. ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் 5 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.