மாத்தறையில் போலி ஆவணங்களுடன் ஐவர் கைது

14 0

மாத்தறையில் போலி ஆவணங்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மஹரகம, கொட்டாவை, பிலியந்தலை, பாதுக்கை மற்றும் கம்புருப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32, 36, 40 மற்றும் 60 வயதுடையவர்கள் ஆவர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடற்கரைப் பூங்கா பகுதியில் வைத்து போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள், கல்விச் சான்றிதழ்கள், மருத்துவப் பட்டச் சான்றிதழ்கள், பட்டச் சான்றிதழ்கள், அரச அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட உத்தியோகபூர்வ முத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட ்டவிசாரணையில், மஹரகம மற்றும் பிலியந்தலை பிரதேசங்களில் இருந்து 168 போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள், 01 மடிக்கணினி, 03 பிரிண்டர்கள், கணனி மற்றும் அதன் பாகங்கள், போலி பட்டதாரி சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், போலி முத்திரைகள், ஆவணங்களை தயாரித்து சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 5000 ரூபா பெறுமதியுடைய பணத்தாள்கள் 30 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.