வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள், கொடிகளை அகற்றுங்கள்!

40 0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள், வாசகங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், கொடிகளை உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள், வாசகங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கான திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.