தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுரங்களை பறித்த பொலிஸார்

35 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மருதங்கேணி பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தபோது அங்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிஸார் துண்டுப்பிரசுரங்களை பறித்துள்ளனர்.

இதனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அங்கு பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் மருதங்கேணி பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.