போதைப்பொருளுடன் சிறைச்சாலைக்கு சென்ற இருவர் கைது

32 0

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலை என்பவற்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் தனது ஆடை மடிப்பில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக களுத்துறை குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.