நாட்டை வந்தடைந்தார் நெத்மி அஹிங்சா!

30 0

ஸ்பெயினில் இடம்பெறும் உலக சம்பியன்ஷிப் கனிஷ்ட மல்யுத்த போட்டிகளில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் நெத்மி அஹிங்சா நேற்றிரவு (08) நாட்டை வந்தடைந்தார்.

மல்யுத்த போட்டி வரலாற்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் பெற்றுக்கொண்ட உயரிய பதக்கமாக இது கருதப்படுகிறது.

உலக மல்யுத்த சம்மேளனம் நடத்திய இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 100இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 600 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

நெத்மி அஹிம்சா குருநாகல் வேல்பல்ல சங்கரத்ன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியாவார்.

நெத்மியை வரவேற்க விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மல்யுத்த சம்மேளன அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.