அனைத்துக் கட்சிகளையும் சரியான முறையில் அவதானித்து மக்கள் தங்களது தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என சர்வஜன அதிகார வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
திலித் ஜயவீரவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற ‘திலித் கிராமத்திற்கு’ மக்கள் பேரணியின் மற்றுமொரு கூட்டம் இன்று (09) பிற்பகல் அயகம சந்தைத் தொகுதிக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரியான தீர்மானம் எடுக்கப்படாவிடின், அது தற்போதைய சந்ததியினர் செய்யும் சரிசெய்ய முடியாத தவறு எனவும் சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,
நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பது மிகத் தெளிவாக புரிகிறது. இந்நாட்டின் நாகரீகம் கலாச்சாரம் என்று எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் நாம் கலாச்சாரமோ நாகரீகமோ இல்லாத ஒரு நாடு. இப்படி கூறுபவர்களுக்கு எல்லாம் நாகரீகம், கலாச்சாரம் என்று ஒன்றும் இல்லை. அதற்காக நாம் அனுதாபப்பட வேண்டும். உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிலும் 3 சதவீத மக்கள் கலாச்சாரமும் நாகரீகமும் இல்லாத மக்கள். அது தான் உண்மை. ஆனால் மீதமுள்ள 97% பேர் மீது திணிக்க முயற்சிக்கும் இந்த குற்றச்சாட்டை தோற்கடிக்க வேண்டும். எனவே, என்ன நடக்கப் போகிறது என்பதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என்பதை இந்த நாட்டு தேசப்பற்றுள்ள மக்களுக்குச் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் தான் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் உயிருடன் இருக்கும் போதே, நம் தலைமுறையால், இந்த நாட்டிற்கு சரிசெய்ய முடியாத தவறை நாம் மீண்டும் செய்துவிடுவோம்