சிறுவர் இல்லத்தை விட்டு தனது தந்தையை தேடிச் சென்ற சிறுவன் மீட்பு

18 0

சிறுவர் இல்லத்தை விட்டு தனது தந்தையை தேடி சென்ற சிறுவன் ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலஸ்கமுவ பில்லேவ பிரதேசத்தை சேர்ந்த 09 வயது சிறுவனே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த சிறுவனின் பெற்றோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதால் இந்த சிறுவன் ஹோமாகம ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில்  ஒப்படைக்கப்பட்டிருந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சிறுவன் தான் வசிக்கும் சிறுவர் இல்லத்தை விட்டு தனது தந்தையை தேடி வெளியே சென்றுள்ளார்.

இதன்போது இரவு நேர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் மத்தேகொட சந்திக்கு அருகில் வைத்து இந்த சிறுவைனை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தேகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.