கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களுடன் இவ்வருடத்தில் 162 பேர் கைது!

20 0

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம்  திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

9,631 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 385 கிலோகிராம் ஹெரோயின், 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் , கேரள கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 162 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 11 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.