பாணந்துறை கடலில் மூழ்கி இளைஞன் மாயம்

15 0

பாணந்துறை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை, தொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவரே காணாமல்போயுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

காணாமல்போன இளைஞன் மேலும் சில நபர்களுடன் இணைந்து நேற்று (08) மாலை பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருக்கும் போது இந்த இளைஞனும் மற்றுமொரு நபரொருவரும் திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது, அங்கு கடமையிலிருந்த பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் கடலில் மூழ்கிய இருவரில் ஒருவரை காப்பாற்றியுள்ள நிலையில் இளைஞன் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில், காணாமல்போன இளைஞனைத் தேடும் பணியில் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.