ஜா எலயில் ரயில் – கார் விபத்து

18 0

ஜாஎல பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் புத்தளத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது ரயில் கடவையில் உள்ள பாதுகாப்பு மின் சமிக்ஞைகள் செயலிழந்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது, காரினுள் 5 பேர் பயணித்துள்ள நிலையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.