களுத்துறை சிறைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற இருவர் கைது

26 0

களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்றதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் தான் அணிந்திருந்த சாரத்தினுள் மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.