பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சக மாணவன் கைது

31 0

மொனராகலை, தணமல்வில பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

தணமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.