மேற்குகரையில் ஜோர்தான் வாகன சாரதி துப்பாக்கி பிரயோகம் – எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் பலி

34 0

மேற்குகரையில் ஜோர்தான் எல்லைக்கு அருகில் ஜோர்தானை சேர்ந்த வாகனச்சாரதி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இஸ்ரேலை சேர்ந்த மூன்று இஸ்ரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜோர்தான் ஆற்றினை கடக்கும் பகுதியில் உள்ள அலன்பை பாலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாதியொருவர் டிரக்கில் அலைன் பை பாலத்தை நோக்கி வந்தார் டிரக்கிலிருந்து இறங்கினார் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ,தாக்குதலை மேற்கொண்டவரும் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி தாக்குதல் தனிநபரின் செயல் என தெரிவித்துள்ள ஜோர்தான் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டவர் ஜோர்தானை சேர்ந்த 39 வயது நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.