ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான கையொப்பங்களை இட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையொப்பங்களை மோசடியமான முறையில் இட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரபால சிறிசேனவிற்கும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களில் குற்றம் சுமத்தியிருந்தார்.இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யயப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.