சிரியாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் விமானதாக்குதல் – ஐவர் பலி

59 0
image

சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர் என சிரிய அரச ஊடகமான சனா தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

சிரியாவின் மத்திய பகுதியில் பல வெடிப்புச்சத்தங்களும், வான்பாதுகாப்பு பொறிமுறைகள் இயக்கப்படும் சத்தங்களும் கேட்டதாக சனா தெரிவித்துள்ளது.

வடமேற்கு லெபனான் பகுதியிலிருந்து மத்திய சிரியாவில் உள்ள இராணுவ இலக்குகள் இஸ்ரேல் வான் தாக்குதலை மேற்கொண்டது என சிரியாவின் இராணுவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன, காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.