அர்த்தமுள்ள குடியுரிமையையே கோருகிறோம் ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா

20 0

எம்மை இந்திய தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்ள். இலங்கையர்களாக எம்மை இன்றும் அங்கீகரிக்கவில்லை. அர்த்தமுள்ள குடியுரிமையை கோருகிறோம். இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜனாதிபதி ஜனாதியாகும் சூழல் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம் பெற்ற ‘ஜனாதிபதித்

வேட்பாளர்களுக்கிடையிலான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி ,பதில் வருமாறு,

கேள்வி–  நாணய நிதியத்தின் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை குறிப்பிடுங்கள் ?

பதில் -சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் பேசப்போவதில்லை. ஏனெனில் நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் நிறைவடைந்துவிட்டன.

அரசியலமைப்பு பற்றி தொடர்ச்சியாக பேசுகிறோம். மத்திய வங்கியின் யாப்பு பற்றி யாரும் அவதானம் செலுத்துவதில்லை.இந்த யாப்புக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது பற்றி சிந்தித்ததுண்டா, இதனை ஆராய்ந்து பார்த்தால் சர்வதேச நாணய நிதியம் குறித்து தீர்மானத்தை எடுக்கலாம். மத்திய வங்கியின் யாப்பில்  சர்வதேச நாணய நிதியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆகவே இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது எடுத்துள்ள தீர்மானங்களை தொடர வேண்டும் இருப்பினும் அது நிலையானதாக காணப்பட கூடாது. தேசிய பொருளாதாரத்துக்கு பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி – சுகாதாரம், நலன்புரி, கல்வி, பொது போக்குவரத்து, வீட்டு வசதி, சமூக பாதுகாப்பு, ஆகிய அடிப்படை தேவைகளை சகல பிரஜைகளும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு  காணப்பட வேண்டும். நீங்கள்  ஆட்சிக்கு வந்தால் இந்த அடிப்படைத் தேவைகளை அனைவரும் நியாயமான வகையில் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கும் யதார்த்தமான  நடவடிக்கைகள் மூன்றை குறிப்பிட முடியுமா ?

பதில் – நான் லயன் அறையில் பிறந்தேன்.  லயன் அறையை ஜனாதிபதி தேர்தல் அலுவலகமாக மாற்றியமைத்து அங்கு தான் எனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டேன். எமது 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடந்த 200 வருடகாலமாக லயன் அறைகளில் தான் வாழ்கிறார்கள். ஆனால் நாம் சமவுரிமை பற்றி பேசுகிறோம்.

பெருந்தோட்டப் பகுதியில் வாழ்பவர்களில் 40 சதவீதமானோருக்கு இன்றும் மலசலகூட வசதிகள் இல்லை என்று மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளில் பெருந்தோட்ட மக்களுக்கு இன்றும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

கேள்வி –வங்குரோத்து நிலைக்கு ஊழல் மற்றும் அரச நிர்வாகத்தின் பலவீனம் பிரதான காரணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியன தொடர்பில் உங்களிடமுள்ள திட்டங்கள் என்ன ?

பதில் -அரச நிர்வாகம் டிஜிட்டல் மயப்படுத்தினால் ஊழல் மோசடிகளை குறைக்க முடியும். அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு மதிப்பாய்வு செய்தால் ஊழல் மோசடிகள் இடம்பெறாது.

2012 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான 10 வருட காலப்பகுதியில் அபிவிருத்திக்கான முதலீடுகளில் 12  சதவீதமானவை மாத்திரமே அபிவிருத்தியடைந்துள்ளன. 88 சதவீத முதலீடுகளுக்கு நேர்ந்தது என்ன.

கேள்வி – 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன ?

பதில் – இந்த சந்தர்ப்பத்தில் ஒரு தமிழராக நான்  கலந்துக் கொண்டுள்ளேன்.எம்மை இந்திய தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்ள். இலங்கையர்களாக எம்மை இன்றும் அங்கீகரிக்கவில்லை. அர்த்தமுள்ள குடியுரிமையை கோருகிறோம்.இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜனாதிபதி ஜனாதியாகும் சூழல் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.