இலங்கைக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்கியுள்ளது.
தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதன்படி , பயணிகளுடன் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட 450 இலங்கை வர்த்தகர்கள் இணையத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக சுமூகமான பயணம் இலகுவாக்கப்படும்.
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிலவரம் படி VisaGuide கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகளாவிய ரீதியில் 140வது இடத்தில் தன்சானியா உள்ளது.
தன்சானியா நாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள்49 நாடுகளுக்கு விசா இன்றி செல்லமுடியும்.