காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்தம் அல்லது கொண்டம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் சிக்கலில் மாட்டுவோம் என்ற நிலையிலேயே அரசு பதில்கூறாது இருக்கிறது முதலமைச்சர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் பிடித்தம் கொண்டம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் அது பாரதூரமான குற்றம் அதானால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியும் இன்நிலையிலேயே அரசு பதில்கூறாது இருக்கிறது நாங்கள் நெருக்குதல்களை கொடுத்து செய்யக்கூடியதை செய்துவருகிறோம் என்று வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மக்களை சந்தித்த வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மக்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்
நாட்டில் இடம்பெற்ற யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போகச்செயப்பட்டவர்கள் என தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் கருத்துக்களை கேட்டு அங்கு கருத்து தெரிவித்த வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்
நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பயனுடையவை வெறுமனே காணமல் போனார் என்று கூறாது இந்த இடத்தில் கண்டோம் அந்த இடத்தில் கண்டோம் இவ்வாறு ஆதாரபூர்வமான கருத்துக்கள் பயனுடையதாக அமையும் இவற்றை எழுத்து மூலம் தருமாறு கோரினார்
தொடர்ந்து ஒரு விடயத்தை நீங்கள் மறக்க கூடாது தூங்கிகொண்டிருக்கிராவனை எழுப்பலாம் பாசாங்கு செய்யிறவனை எழுப்பேலாது எங்களுக்கு அது செய்யிறம் இது செய்யிறம் என்று கூறும் அரசு உண்மையிலேயே இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டால் எமக்கு பிரச்சனையில்லை ஆனால் நடத்த போறம் நடத்த போறம் என்று நடத்தாமலிருக்க காரணம் அவர்கள் எங்கட ஆக்கள் அவர்களை எவ்வாறு காட்டிக்கொடுப்பது என்பதே அங்குள்ள பல அரசியல்வாதிகளின் நிலை ஆனால் நெருக்குதல்களால் தான் இதனை செய்யமுடியும் அதனைத்தான் இப்போது செய்து வருகிறோம் இது இலகுவான விடயமல்ல ஏனெனில் நாங்கள் பிடித்தம் கொண்டம் அல்லது இந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று கூறினால் அது பாரதூரமான குற்றம் என அவர்களுக்கு தெரியும் இதனாலேயே இழுத்தடிக்கின்றனர் நெருக்குதல் மூலம் இதனை செயர்ப்படுத்துவோம் என்றார்.