இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 4 ஆம் திகதி கொஹொம்பகடவல தமிமென்னேவ கிராமத்தில் உள்ள 20 அடி ஆழமுடைய விவசாயக் கிணறு ஒன்றில் யானை குட்டி ஒன்று தவறி வீழ்ந்துள்ளது.
பின்னர், பிரதேசவாசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து யானை குட்டியை காப்பாற்றி மீட்டுள்ளனர்.
இதன்போது, இந்த யானை குட்டியானது அங்கிருந்த பெண் ஒருவரை மிகவும் ஆக்ரோஷமாக துரத்திச் சென்றுள்ளது.
இதனால், அங்கிருந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறித்த பெண்ணை காப்பாற்றுவதற்காக யானை குட்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன்போது அந்த யானை உயிரிழந்துள்ளது.