மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்களின் 20 வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் படையினர் வசமுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் தொடர்பான விபரங்கள் குறித்துஇன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, புணானை, புச்சாங்கேணி, தியாவட்டவான், கிரான், முறக்கொட்டான்சேனை, கொம்மாதுறை, மயிலம்பாவெளி, குருக்கள்மடம் மற்றும் ஓந்தாச்சிமடம் ஆகிய இடங்களிலுள்ள தனியார் வாழ்விட, மற்றும் வாழ்வாதாரக் காணிகள் இன்னும் படையினராலும் காவல்துறையினராலும் விடுவிக்கப்படவில்லை.
மேலும், களுவாஞ்சிக்குடி, ஆயித்தியமலை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, பாலமுனை, பாலமீன்மடு, வெல்லாவெளி, பாலையடிவட்டை, தும்பங்கேணி மற்றும் பெரியபோரதீவு ஆகிய இடங்களிலுள்ள காணிகளும் விடுவிக்கப்படவில்லையெ அவரது அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.