எரிபொருள் இன்மையால் திடீரென நிறுத்தப்பட்டது நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை!

29 0
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது வியாழக்கிழமை (05) பயணத்தில் ஈடுபடவில்லை.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல் சேவையானது உத்தியோப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் காலை நாகைப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை குறித்த கப்பல் வந்தடைந்தது.

இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகை பட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரானது. இந்நிலையில், பயணிகளும் கப்பலில் ஏறி பயணத்திற்கு தயாராக இருந்தனர்.

இருப்பினும், கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மையினால் குறித்த பயணமானது இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.