தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்று அச்சிடப்பட்ட புத்தகங்கள்!

24 0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு விதத்தில் தமது தேர்தல் கொள்கைகளை முன்வைத்த போதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள திலித் ஜயவீர கூறுகிறார்.

‘திலித் கம’ கூட்டத் தொடரின் கீழ் கெஸ்பேவ பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர,

”தற்போது இருக்கும் 4, 5 பேரும் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் புத்தகங்களை வௌியிட்டுள்ளார்கள். பச்சை நிறத்தில் அடிக்கப்பட்டுள்ளது, ஊதா நிறத்திலும் அடிக்கப்பட்டுள்ளது, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களிலும் நிறத்தில் அடிக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வாக்கியம் கூட இல்லை. இவர்கள் ஒரு பழக்கமாக புத்தகங்களை அச்சிட்டு விநியோகித்து உங்களை ஏமாற்றி அவர்களுடைய தொழிலை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். போராட்டத்தின் பின்னர் அனைவரும் ஓடிவிட்டதால் தான் வந்ததாக கூறிய எமது ஜனாதிபதி கேஸ் விலையை 4 மடங்கு உயர்த்தினார்”. என குறிப்பிட்டார்.