தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்று

14 0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (06) மூன்றாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இன்றும் (06) முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்று வாக்களிக்க முடியாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று (06) தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்காளர்கள் உரிய திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.