பெட்ரோல் ஊற்றி கொழுத்திய முன்னாள் காதலன் ; உகண்டாவில் ஒலிம்பிக் வீராங்கனை பலி

35 0

முன்னாள் காதலனால்  தீமூட்டி எரிக்கப்பட்ட உகண்டாவின் ஒலிம்பிக்கின் தடகளவீராங்கனை ரெபேக்கா செப்டகி உயிரிழந்துள்ளார்.

பரிஸ் ஒலிம்பிக்கில் மரதன் ஓட்டபோட்டியில் உகண்டாவை பிரதிநிதித்துவம் செய்த செப்டகி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் காதலனால் தீமூட்டி எரிக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது பெட்ரோலை ஊற்றிய காதலன் பின்னர் தீ மூட்டினார் என தகவல் வெளியாகியுள்ளது.

தேவலாயத்திலிருந்து அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக் வீராங்கனைக்கும் அவரது காதலனிற்கும் இடையில் காணித்தகராறு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உகண்டாவில் பெண் வீராங்கணைகளிற்கு எதிரான வன்முறைகள் குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்முறைகள் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

துயரம் தரும் வகையில் குடும்பவன்முறையில் சிக்கிய ரெபேக்கா செப்டகி இன்று  காலை உயிரிழந்துள்ளமை குறித்து கடும் கவலை கொண்டுள்ளோம் என உகண்டாவின் தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.