நாட்டை கட்டியெழுப்ப மக்கள் சரியான தீர்மானம் எடுக்கவேண்டும்

12 0

எமது ஆரம்ப ஆட்சியாளர்கள் போராடி வெள்ளையர்களிடமிருந்து எமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்த போதும் 1977க்கு பின்னர் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எமக்கு வங்குராேத்து அடைந்த நாட்டையே வழங்கியுள்ளார்கள். அதனால் மாேசடிமிக்க ஆட்சிமுறையை இல்லாதொழித்து, நாட்டை ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டி இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் தற்போது மக்களுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் இந்த தேர்தலில் மக்கள் சரியான தீ்ர்மானத்தை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

தேசிய ஜனநாணயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ்வின் முறையானதொரு நாடு எனும் தொனிப்பொருளிலான  தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (05) இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது நாடு 450 வருட காலம் வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் அடிமைகளாக இருந்தது. எமது ஆரம்ப தலைவர்களின் அர்ப்பணிப்பு தியாகத்தினால் 1948ல் எமக்கு சுதந்திரம் கிடைத்தது.

ஆனால் 1977ல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரம். விகிதாசார தேர்தல் முறையில் இருந்துவரும் மோசடி போன்ற விடயங்களால் எமது சமூகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

அதனால் எமது நாடு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட வேண்டி இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் வந்தபோது, அதனை நான் எதிர்த்தேன். இதனை செய்தால், எமது நாட்டின் ஏனைய வளங்களையும் வெளிநாடுகளுக்கு வழங்கி எதிர்காலத்தில் எமது நாடு மீண்டும் வெளிநாட்டவர்களின் அடிமை நிலைக்கு செல்லும் என அன்று தெரிவித்தேன்.

ஆனால் அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் எனது கருத்தை ஏற்றுக்கொள்ள தவறியதால், தொடர்ந்து எமது வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பங்களாதேஷில் இன்றைய நிலைக்கு அதுவே காரணம். பங்களாதேஷை நீண்டகாலமாக ஆட்சி செய்துவந்த ஷேக் ஹசீனா, ஆட்சியை கைவிட்டு வெளிநாடென்றில் இருக்கிறார்.

அவர் அங்கிருந்து தெரிவித்த விடயம்தான், பங்களாதேஷின தீவுப்பகுதி ஒன்றை வெளிநாடு ஒன்று கேட்டபோது அதனை கொடுக்க மறுத்ததால், அந்த நாடே பங்களாதேஷின் இந்த நிலைக்கு பின்னால் இருந்து செயற்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

எமக்கு என வெளிநாட்டு கொள்கையில் நாங்கள் உறுதியாக இருந்து, அனைத்து நாடுகளுடன் அணிசேரா கொள்கையை கடைப்பிடித்து வந்தால், அனைத்து நாடுகளுடன் ஒற்றுமையாக இருந்து, அவர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். எஸ். டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்க, சிறிமா பண்டார நாயக்க போன்ற எமது முன்னைய ஆட்சியாளர்கள் அதனையே செய்தார்கள்.

1077க்கு பிறகே எமது நாட்டுக்கு சாபக்கேடு ஆரம்பிக்கப்பட்டது.  நாங்கள் ஏதாவது ஒரு நாட்டுக்கு எமது நாட்டு வளத்தில் ஒன்றை கொடுத்தால், ஏனைய நாடுகள் எங்களின் ஏனைய வங்களை ஒன்றன் பின் ஒன்றாக கேட்பார்கள். அப்போது எங்களுக்கு மறுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதன் பிரகாரம் 1977ல் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதார கொள்கை, விகிதாசார தேர்தல் முறை போன்ற விடயங்களால், அன்று தொட்டு நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாடு தொடர்பில் சிந்தி்க்காமல் தங்களை வளர்த்துக்கொள்ளவே நடவடிக்கை எடுத்தனர்.

இதன் விளைவாக இறுதியில் எங்களுக்கு வங்குராேத்து அடைந்த நாட்டையே வழங்கி இருக்கிறார்கள். நாடொன்றில் சட்டத்தின் ஆட்சி இருக்குமானால் அந்த நாடு உறுதியாக இருக்கும் சட்டம் மீறப்படும்போது அந்த நாடு இல்லாமல் போகும்.

அதனால் சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்துக்கொண்டு முறையான டாடொன்றை கட்டியெழுப்ப தேவையான திட்டங்களை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

அதற்கான பொன்னான சந்தர்ப்பம் தற்போது நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கிறது. மக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.