பிபிலயில் இரு பஸ்கள் மோதி விபத்து : 47 பேர் காயம் !

55 0
பிபில – லிந்தகும்புர பிரதேசத்தில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிபில மெதகம பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையை பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும் அதே வீதியில் அதே திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.