கொடகமவில் இனந்தெரியாத நான்கு நபர்களால் தாக்கப்பட்ட 8 பேர் காயம்

29 0

பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகம பிரதேசத்தில் இனந்தெரியாத நான்கு நபர்களால் தாக்கப்பட்டு 06 பெண்கள் உட்பட 08 பேர் காயமடைந்துள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று, சந்தேக நபர்கள் நால்வரும் மது போதையிலிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

06 பெண்கள் உட்பட 08 பேர் கொண்ட குழுவொன்று கொடகம பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, அவ்வழியாக சென்ற இனந்தெரியாத நான்கு நபர்கள் குளித்துக் கொண்டிருந்த பெண்களைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் வாக்குவாதம் எல்லை மீறியதில் இனந்தெரியாத நான்கு நபர்களால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.