“தெமட்டகொடை சமிந்த” வின் மகனுடன் இணைந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது

68 0

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தெமட்டகொடை சமிந்த”வின் மகனான மலீஷ என்பவருடன் இணைந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொத்தடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடமிருந்து 13 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொத்தடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.