ஹப்புத்தளையில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது

32 0

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொமின்ன பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்டதாக கூறப்படும் 07 சந்தேக நபர்கள் ஹப்புத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 மற்றும் 69 வயதுக்கு இடைப்பட்ட பலாங்கொடை, பண்டாரவளை மற்றும் இதல்கஸ்ஹின்ன பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.