பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

39 0
மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் சிலரால் தாக்கப்பட்டு காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த பிரசன்ன பிரனாந்து என்ற நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவர் விசாரணை ஒன்றுக்காக மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த போது பொலிஸ் அதிகாரிகள் சிலரால் தாக்கப்பட்டு இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சி டி ஸ்கேன் பரிசோதனைக்காக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.