இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் சொந்த ஊர் சென்றடைந்தனர்

36 0

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேர் இன்று வியாழக்கிழமை காலையில் ராமேசுவரம் .சென்றடைந்தனர்

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின் செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கடந்த ஜுலை 23-ம் தேதி அன்று கைப்பற்றப்பட்டது.

படகுகளிலிருந்த   9 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று ஊர்காவல்துறை நீதிமன்றம் 7 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தது. அதேசமயம்  ஹரி கிருஷ்ணன சகாய ராபர்ட் ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.

விடுதலை செய்யப்பட்ட 7 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை இரவு சென்னைசென்றடைந்தனர். . பின்பு மீனவர்கள் 7 பேரும் மீன்வளத்துறையினர் மூலம் தனி வாகனத்தில் ராமேசுவரத்திற்கு வியாழக்கிழமை காலை அழைத்து செல்லப்பட்டனர்.