மோட்டார் சைக்கிளை வேனால் மோதிய பொலிஸ் உத்தியோகத்தர் ; இருவர் பலி, குழந்தை காயம்

69 0

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ – கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அருகில் நேற்று புதன்கிழமை  (04) மோட்டார் சைக்கிளுடன் வான் ஒன்று மோதியதில் மூன்று வயது குழந்தையொன்று காயமடைந்துள்ளதோடு இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருபெண்களும் 38 மற்றும் 58 வயதுடைய கல்கமுவ, மலுலேவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழந்தை  காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சாரதி உறங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்டாக கடமையாற்றும் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.