விடுதி அறையொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை!

71 0

அமந்தொழுவ பகுதியில் விடுதி அறையொன்றில் கூரிய  ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சேரங்கடை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடை பெண்ணொருவராவார்.

கொலைசெய்த சந்தேகநபருடன் குறித்த பெண் அமந்தொழுவ பகுதியில் விடுதி அறையொன்றில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கொலையினை செய்த சந்தேகநபர் தப்பிச்  சென்றுள்ளதுடன், இந்த சம்பவம்  தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.