புதிய வேலைத்திட்டத்தை நாமே முன்வைத்துள்ளோம்

73 0

நாட்டு மக்களுக்காக புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி சர்வஜன அதிகாரம் என அதன் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் மீண்டும் தமது பழைய கொள்கைகளை பிரபலப்படுத்த முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.

“நாடு புதிதாக ஒன்றைக் கேட்கிறது. அதற்காக நாங்கள் நிற்கிறோம். வேறு யாரும் வேறு எதையும் முன்வைக்கவில்லை. எங்கள் மூலோபாயத் திட்டத்தில் மாற்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை சிறந்த மாற்றமாக பார்க்குமாறு இலங்கை மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.