கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை

35 0

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறையை தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தயாரித்துள்ளது.

தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் 128-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் விதிமீறல்கள் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை, விதிமீறல் வழக்குகளை கையாளும்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், விதிமீறல் தொடர்பான புகார்கள் மீதான நடவடிக்கையை பொறுத்தவரை, 160 புகார்கள் பெறப்பட்டு, அந்த புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.