வன்னியின் கடைசி மன்னன் மாவீரன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை இன்று(20) பகல் 10.00 மணிக்கு முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைய, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களால் பயன்படுத்தப்பட்ட பீரங்கி மீட்கப்பட்ட இடத்திலிருந்து, நேர் எதிரே உள்ள இடத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவனேசன்,எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.