பிரிட்டனில் நடைபெறும் பொதுநலவாய உயர்மட்டப் பிரதிநிதிகள் மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன கலந்துகொள்ளவுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
அம்மாநாட்டுக்கு முன்னதாக நடைபெறும் பொதுநலவாய உயர்மட்டப் பிரதிநிதிகள் மாநாடு இம்மாதம் 2 – 6 ஆம் திகதிவரை லண்டனின் மார்ல்போரோ ஹவுஸில் அமைந்துள்ள பொதுநலவாய அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது.
இம்மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான வெளிவிவகார அமைச்சின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதேவேளை இம்மாநாட்டின் பக்க நிகழ்வாக வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பொதுநலவாய அமைப்பில் அங்கம்வகிக்கும் ஏனைய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார்.