சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 117 பேர் ரவுடிகள் ஆவர். ‘ஏ’ பிளஸ் மற்றும் ‘ஏ’ வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர். மேலும் 32 கொலை, கொலை முயற்சி குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது