புதையல் மூலம் கிடைத்ததாக கூறப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்காக வேனில் கடத்திச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (02) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் பாதுக்கை நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹந்தபான்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 18, 40 மற்றும் 48 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து புத்தர் சிலை, வலம்புரி சங்கு , பழைய நாணயங்கள் 02 மற்றும் மட்பாண்டங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.