அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 120, 375 மில்லிலீற்றர் மதுபான போத்தல்கள் 96 மற்றும் 500 மில்லி லீற்றர் பியர் டின்கள் 48 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.