டெவோன் கால்வாயில் வீழ்ந்து லொறி விபத்து ; சாரதி காயம்

14 0
தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.