நுவரெலியாவில் பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பப்படிவம்

16 0

நுவரெலியா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் பத்திரம் பெறுவதற்காக செல்லும் பொதுமக்களுக்கு  இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாக்கி உள்ளது.

இந்நடவடிக்கையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது என பொதுமக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

இந்நடவடிக்கையானது ஒரு மாதத்திற்கும் மேலதிகமாக நடைபெற்று வருகிறது. குறித்த விடயத்தின் போது நுவரெலியா பிரதேச அலுவலகத்தில் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் விண்ணப்ப படிவத்தில் இறப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சிங்கள மொழியில் இறப்பு என குறிப்பிடப்பட்ட சொல்லை வெட்டி விட்டு அதற்கு பதிலாக ஆங்கில மொழியில் birth என எழுதப்பட்டு காணப்படுகிறது. இதனால் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக பொறுப்பு கூற வேண்டிய அதிகாரியிடம் வினவிய போது இவ்வாறான நடவடிக்கை கடந்த ஒரு மாதத்திற்கு மேலதிகமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.