200 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் – தயாசிறி ஜயசேகரவிற்கு, பிரசன்ன கடிதம்

16 0
தாம் பெற்ற மதுவரி  அனுமதிப் பத்திரத்தை  கம்பஹா, மாகேவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் மதுவரி உத்தியோகத்தர் ஒருவரின் பெயரில் வழங்கப்பட்டதாக பொய்யான அறிக்கையினால் தமக்கு ஏற்பட்ட நற்பெயருக்கு 200 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உரிய இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்காவிட்டால் அதற்கான தொகையையும் அதற்கான சட்டரீதியான வட்டியையும் பெற்றுக் கொள்ள வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் தனது சட்டத்தரணி நதீஷா ஹெட்டியாராச்சி ஊடாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மாத்தறை, அக்குரஸ்ஸவில்  நடைபெற்ற கூட்டத்தில் தமது கட்சிக்காரர் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்பில் தொலைக்காட்சி, பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் காலை செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை என சட்டத்தரணி நதீஷா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பலமான அமைச்சரவை அமைச்சர் மற்றும் பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான எனது கட்சிக்காரர் மீதான மக்களின் நம்பிக்கையை பாரியளவில் சேதப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்த பொய்யான கருத்துக்கள் உள்ளதாகவும் இந்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் இந்தக் கருத்து தொடர்பில், அதன் ஊழியர் மதுவரி ஆணையாளர் நாயகத்திடம் கேட்டபோது, தனது வாடிக்கையாளரின் பெயரிலோ அல்லது அவரது பரிந்துரையின் பேரிலோ வேறு எவருக்கும் மதுவரி அனுமதி பத்திரம் வழங்கப்படவில்லை என எனது கட்சிக்காரருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நதீஷா ஹெட்டியாராச்சி   மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விஜயானந்த ஹேரத் 

ஊடகச் செயலாளருக்கு பதிலாக

பணிப்பாளர் நாயகன் – நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை