அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அவருக்கு அமெரிக்காவின் 50 மாநிலங்களின் ஜனநாய கட்சியினாலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹிலரி கிளின்டனுக்கு போட்டியாக இருந்த செனட் உறுப்பினர் பேர்னி சண்டர்ஸின் ஆதரவாளர்கள் நேற்றையதினம் ஹிலரி கிளின்டனை தூற்றி இருந்தனர்.
எனினும் இந்த முரண்பாட்டை தணிப்பதற்கு கட்சியின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.