ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் நாடுகடத்தியுள்ள ஜேர்மனி

18 0

குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான்   நாட்டவர்களை ஜேர்மனி  நாடு கடத்தியுள்ளது.

2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மனித உரிமைகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை ஜேர்மனி நிறுத்தியிருந்தது.

இதற்கிடையில், கடந்த வாரம் ஜேர்மனின் உள்ளூர் விழா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரிய வந்ததும், நாடுகடத்தும் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, புலம்பெயர் கொள்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஜேர்மனி அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் முதற்கட்டமாகவே தீவிர குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.