ரணிலின் சேவையை நினைவில் வைத்து நன்றியுணர்வுடன் தீர்மானம் எடுங்கள் – நிமல் லன்சா

30 0

வீழ்ந்த நாட்டை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை மீட்டெடுத்தார். அதனை நினைவில் வைத்து நன்றியுடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் எதுவும் இன்றி இருந்த போது நமக்காக யார் முன்வந்தார்கள் என்பதை நினைவில் கொண்டு தேர்தலின்போது முடிவெடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்தார்.

 

 

 

 

ஜா-எல பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வீழ்ந்த நாட்டை இரண்டாண்டுகளில் மீட்டவர் யார்? அதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

நாடு வீழ்ந்தபோது அநுரவுக்கும்  சஜித்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வந்தார்களா? ரணில் விக்ரமசிங்க தான் முன்வந்தார். அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நினைவில் வைத்து நன்றியுடன் இருங்கள். எரிபொருள், எரிவாயு, உரம், மருந்து என எதுவுமே இல்லாமல் இருந்த போது நமக்காக யார் முன்வந்தார்கள் என்பதை நினைவுகொள்ளுங்கள்.

நாடு மீண்டும் வீழ்ந்தால் மீண்டும் பழைய நிலைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. சஜித்தும் அநுரவும் நாட்டை காப்பாற்ற முன்வரவில்லை. இன்று சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மருந்து நிறையவே உள்ளன. இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

நாட்டை மீட்க அனுபவமும் திறமையும்  இருக்க வேண்டும். அனுரகுமாரவுக்கு மற்றவர்களை   விமர்சிக்க மட்டுமே முடியும்.

கோத்தபாய ராஜபக்சவும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பமும் இந்த நாட்டைத் தோல்வியடையச் செய்துவிட்டனர். இன்று இங்குள்ள அனைவரும் அவர்களை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்தனர். ஆனால் அவர்கள் நாட்டையும் மக்களையும் எங்களையும் தோல்வியடையச் செய்தார்கள். ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்த நாட்டை இரண்டு வருடங்களில் மீட்டெடுத்தார். ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்று நாட்டைக் காப்பாற்றினார்.

எனவே நன்றியுணர்வுடன் இருக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. உங்கள் மனசாட்சிப்படி செயற்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டின் நிலைமையை நாம் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.