ஜேர்மன் மாகாணமொன்றில் இந்த வார இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் மீது பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
kingmaker கட்சி
ஜேர்மனியின் Thuringia மாகாணத்தில், kingmaker கட்சி என அறியப்படும் Sahra Wagenknecht Alliance (BSW) கட்சியின் தலைவர்களில் ஒருவரான Sahra Wagenknecht மீது பெயிண்ட் வீசப்பட்டது.
திடீரென தன் மீது பெயிண்ட் வீசப்பட்டதால் Sahra சற்று அதிர்ச்சியடைந்தாலும், சுதாரித்துகொண்டு மீண்டும் தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
பெயிண்ட் வீசிய நபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
BSW கட்சி, தேர்தலில் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் அக்கட்சி kingmaker கட்சி என அழைக்கப்படுகிறது.
வித்தியாசமான கருத்துக்கள் கொண்ட கட்சி
Sahraவின் BSW கட்சி, வித்தியாசமான கருத்துக்கள் கொண்ட கட்சியாகும்.
Image: Sascha Fromm/Thüringer Allgemeine/imago
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட வலதுசாரியினருக்கு எதிராக துவக்கப்பட்ட BSW கட்சியும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற கொள்கை கொண்ட கட்சிதான்.
உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என Sahra தெரிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
ஆக, எதனால் Sahra மீது பெயிண்ட் வீசப்பட்டது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.