தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்

61 0

ஜனாதிபதியின் சட்டத்தரணியான கௌசல்ய நவரத்ன இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பாக இன்று (31) பொதுச்சபை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பெருமளவு நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கௌசல்ய நவரத்னவுக்கு எதிராக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.