ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றும் 25 பெண்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

52 0

மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் 25 பெண்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு இடம்பெற்றுள்ளது.

சுகயீனமடைந்தவர்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக இந்த பெண்கள் இவ்வாறு சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.